ராஜீவ்காந்தி நினைவு நாள்

இன்றைய சிறப்பு

சிலி – கடற்படையினர் நாள்
இந்தியா – பயங்கரவாதத்திற்கு எதிரான நாள்

தீவிர ஐயப்ப பக்தரும், மறைந்த நடிகருமான எம்.என்.நம்பியார் பிறந்த நாள்

தென்னிந்திய நடிகர் மோகன்லால் பிறந்த நாள். (1960)

பிற முக்கிய நிகழ்வுகள்

கிமு 427 – பிளாட்டோ, கிரேக்கத் தத்துவவியலாளர் பிறந்த நாள்.
996 – புனித ரோமப் பேரரசின் மன்னனாக 16 வயது மூன்றாம் ஓட்டோ முடி சூடினான்.
1502 – போர்த்துக்கீசிய மாலுமி ஜொவாவோ டா நோவா புனித ஹெலெனா தீவைக் கண்டுபிடித்தார்.
1792 – ஜப்பானில் ஊன்சென் மலை வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
1851 – கொலம்பியாவில் அடிமைத்தொழில் ஒழிக்கப்பட்டது.
1859 – பிக் பென் மணிக்கூடு முதன் முறையாக இயக்கப்பட்டது.
1864 – ரஷ்ய-கோக்கசஸ் போர் முடிவடைந்தது.
1871 – பிரெஞ்சு அரசுப் படைகள் பாரீஸ் கொம்யூனைத் தாக்கினார். ஒரு வார முற்றுகையில் 20 ஆயிரம் கொம்யூன் மக்கள் கொல்லப்பட்டு 38,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1894 – 22 வயது பிரெஞ்சு கொடுங்கோலர் எமிலி ஹென்றி கழுத்து துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
1904 – பாரிஸில் சர்வதேச உதைபந்தாட்ட கூட்டமைப்பு (FIFA) தொடங்கப்பட்டது.
1917 – அட்லாண்டாவில் இடம்பெற்ற பெருந்தீயில் பெரும் அழிவு ஏற்பட்டது.

1919 – நடிகரும், ஐயப்ப கோயில் பக்தருமான எம். என். நம்பியார் பிறந்த நாள்.
1941 – இரண்டாம் உலகப் போரின்போது பிரேசிலில் இருந்து 950 மைல் தூரத்தில் ரொபின் மூர் என்ற அமெரிக்க போர்க் கப்பல் ஜெர்மனியின் யூ-படகினால் மூழ்கடிக்கப்பட்டது.
1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி சென்னைக்கு அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனிதக் குண்டுவெடிப்பு மூலம் கொல்லப்பட்டார்.
1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்டு ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
1994 – யேமன் மக்களாட்சிக் குடியரசு யேமன் குடியரசில் இருந்து விலகியது.
1996 – தான்சானியாவில் பூக்கோவா என்ற என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 1000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1998 – 32 ஆண்டுகள் இந்தோனேசியாவை ஆண்ட சுகார்ட்டோ பதவி விலகினார்.
2003 – வடக்கு அல்ஜீரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,000 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.




Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.