ராகுல் காந்தி பிறந்த நாள்

மறைந்த ராஜீவ்காந்தியின் மகனான ராகுல்காந்தி (Rahul Gandhi, 1970 ஜூன் 19-இல் பிறந்தவர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து வந்தவர். வயநாடு தொகுதி பிரதிநிதியாக பாராளுமன்ற உறுப்பினராக தற்போது அவர் உள்ளார். கட்சித் தலைவர் பதவியில் இருந்து தாமாக முன்வந்து விலகினார். நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் அடித்தட்டு மக்களிடையே மிக நெருக்கமாகவும், கிராம மக்களிடையே நெருங்கிய தொடர்பும் கொண்டவர்.

பிற நிகழ்வுகள்

1269 – பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல் பொதுவில் திரியும் அனைத்து யூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என 9-ஆம் லூயி மன்னன் கட்டளையிட்டார்.
1867 – மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.
1870 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
1910 – அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் நாள் கொண்டாடப்பட்டது.
1912 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமலானது.
1943 – டெக்சாசில் இனமோதல் நடந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவுக்கும், ஜப்பானுக்கும் இடையில் பிலிப்பைன்ஸ் கடல் போர் இடம்பெற்றது.
1953 – அமெரிக்காவின் அணு ஆயுத ரகசியங்களை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜூலியஸ் மற்றும் எத்தல் ரோசன்பேர்க் என்ற யூதத் தம்பதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1961 – குவைத் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1970 – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள்.
1987 – ஸ்பெயினில் கடைத்தொகுதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.