ராகுல்காந்திக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்

சென்னை: நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட வங்கி மோசடியாளர்கள் கடன் நீக்கம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி திரித்து பேசுவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டினார்.
நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 பேரின் கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, ஏற்கெனவே தாம் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்காதது ஏன் என்று ராகுல்காந்தி செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு டுவிட்டரில் மறுப்பு தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், வாராக்கடன் விதிகளின்படியே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடனை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடரும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் அளித்த 1.45 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதை மறந்துவிட்டு இந்த விவகாரத்தை மக்களிடம் திசை திருப்புவதாக நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.