ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடிகர் கோபிசந்த் நடிக்கிறாரா?

சென்னை, ஏப்ரல் 20: ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த. படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகும் இப்படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.
கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அண்ணாத்த படத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட படப்பிடிப்பை கொல்கத்தா மற்றும் புனேயில் நடத்த திட்டமிட்ட சிவா அந்தத் திட்டத்தை கைவிட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் ஹைதராபாத்திலேயே தொடங்கினார்.
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. இது உண்மையில்லை என்று கோபிசந்த் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அண்ணாத்த படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. சிறுத்தை சிவா என் நண்பர். அண்ணாத்த படத்தை அடுத்து அவர் எனக்காக ஒரு கதை எழுதுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.