மே 4 முதல் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கும் இன்னமும் தொடர்வதை அடுத்து மே 4 முதல் மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை உலகில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து, 56 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.

இதுவரை உலகில் 2 லட்சத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1993 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து நாட்டில் நோய்த் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 35,043-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,889-ஆக உள்ளது.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளிக்கிழமை மட்டும் 203 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2,526-ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தமிழகத்தில் 28-ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 1082-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் நோய்த்தொற்றின் வேகம் குறையாத சூழலை அடுத்து மேலும் ஊரடங்கை நீட்டிக்க அந்தந்த மாநில அரசுகள் விரும்புகின்றன.
இச்சூழலில் மே 3 வரை அமலில் உள்ள ஊரடங்கை மே 4 முதல் இரு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.