மே 3-க்கு பிறகு 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்

தமிழக அரசு உத்தரவு



சென்னை: மே 3-ஆம் தேதிக்கு 33 சதவீதம் ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அரசாணை விவரம்:
மே 3-ஆம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அத்துடன் 100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது.
நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கொரோனா பாதிப்பு பகுதிகளுக்கு பொருந்தாது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.