முன்னணி நிறுவனங்கள் பங்குச் சந்தையால் வீழ்ச்சி


மும்பை: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதன் காரணமாக உலக பங்குச் சந்தையில் தொடர் வீழ்ச்சி காணப்படுகிறது. அதேபோல் இந்திய பங்குச் சந்தையும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது.
கடந்த இரு மாதங்களில் மட்டும் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால் நாட்டில் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதுதொடர்பான தகவல்களை ஹருன் நிறுவனம் திரட்டி வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 2 மாதங்களில் ரூ.1,44,400 கோடி குறைந்துள்ளது. இதனால் அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 8 இடங்கள் இறங்கி 17-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கௌதம் அதானி சொத்து மதிப்பு ரூ.45,600 கோடி குறைந்துள்ளது. எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவநாடார் சொத்து மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

Jef Besos


உலக அளவில் பாதிப்பை சந்தித்தவர் பிரான்ஸ் நாட்டின் ஆடை அலங்கார நிபுணர் பெர்னார்டு அர்னால்ட். அவருக்கு ரூ.2.28 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் முதல் பணக்காரராக தொடர்ந்து நீடிக்கும் அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு 9 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா வைரஸ் முதல் பரவத் தொடங்கிய சீன நாட்டில் புதிதாக 6 தொழிலதிபர்கள் உலகின் 100 முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.