முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை ரூ.306.42 கோடியாக உயர்ந்தது


சென்னை: தமிழகத்தில் முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.306.42 கோடி திரண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகம் தொடர் பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளிக்க முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரசின் வேண்டுகோளை அடுத்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் ரூ.145.48 கோடி நிவாரண நிதி பெறப்பட்டுள்ளது மொத்தமாக இதுவரை ரூ.306.42 கோடி நன்கொடையாக கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.