முகநூலில் 50 பேர் வரை விடியோ அழைப்பில் உரையாடும் வசதி
புதுடில்லி: முகநூல் (பேஃஸ் புக்) காலவரையின்றி 50 பேர் வரை விடியோ அழைப்பில் உரையாடக் கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
முகநூல் பயனாளர்கள், முகநூல் அல்லது மெசஞ்சர் ஆப் மூலம் யாரை வேண்டுமானாலும் 50 பேர் வரை விடியோ அழைப்பில் இணைத்துக் கொள்ள இந்த வசதி உதவும். விடியோ அழைப்புக்கு குறிப்பிட்ட கால வரையறை எதவும் இல்லை.
முகநூலில் கணக்கு இல்லாதவரும் விடியோ அழைப்பில் இணையமுடியும். உலகளவில் புதிய வசதி செயல்பாட்டுக்கு வரும் முன், இந்த வாரத்தில் சில நாடுகளில் மெசஞ்சர் ரூம்ஸ் வசதி பயன்பாட்டுக்கு வரும் என முகநூல் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.