முகக் கவசம் பயன்படுத்துவது எப்படி?
கரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முகக் கவசத்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டல், வரையறையை உலக சுகாதார அமைப்பு விரைவில் வெளியிடவுள்ளது.
தற்போது அந்த அமைப்பு மருத்துவம், மருத்துமற்ற முகக் கவசப் பயன்பாட்டை மதிப்பீடு செய்து வருகிறது என்று ஏப்ரல் 6-இல் அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
உலகச் சுகாதார அமைப்பு மருத்துவம் மற்றும் மருத்துவமற்ற முகக் கவசப் பயன்பாட்டை மதிப்பிட்டு வருகிறது. பல்வேறு நாடுகளின் அரசு சரியான முடிவை எடுப்பதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், முகக் கவசப் பயன்பாட்டுக்கான வழிகாட்டல் மற்றும் வரையறையை இவ்வமைப்பு வெளியிடவுள்ளது.
முகக் கவசம் அணிவது என்பது கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஒரு பகுதி மட்டுமே. இந்த முகக் கவசத்தால் மட்டுமே கொரானாவை பரவலைத் தடுத்துவிட முடியாது. பல்வேறு நாடுகள், நோய் தொடர்பான கண்டறிதல் பரிசோதனை, தனிமை, சிகிச்சை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்தல், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்களை தேடி அவர்களை தனிமைப்படுத்துதல், மற்றவர்களுடனான இடைவெளியைக் கடைப்பிடிப்பது, குடும்பத்தினரில் எளிதில் நோய்த் தொற்றுக்கு ஆளாவோரிடம் இருந்து சற்று விலகியிருத்தல், வெளியில் சென்று வந்தால் கட்டாயம் சோப்பு போட்டு கை கழுவுதல், இருமல், தும்மல் வரும்போது முழங்கையால் வாய், மூக்கை மறைத்துக்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகள் கொரொனா நோய்த் தொற்று பரவுதலில் இருந்து காப்பாற்றக் கூடியவை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
You must log in to post a comment.