மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்களை நிறுத்தி வைக்க வேண்டும்
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்
சென்னை: மின்சார சட்டத்தில் புதிய திருத்தங்கள், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதால் அதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
தமிழக விவசாயிகளுக்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மின்சார சட்டத் திருத்தங்கள், நடைமுறையில் உள்ள மின்சார சட்டத்தின் வரம்புகளை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் மாநில அரசின் நலன்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இது மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். இச்சட்டத் திருத்தம் வந்தால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்தாகும்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்குவது மாநில அரசின் உரிமை சார்ந்தது. அதை உரிமையை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும்.
கொரோனா தடுப்பு பணிகளில் மாநில அரசுகள் கவனம் செலுத்தியுள்ளதால், மின்சார சட்டத் திருத்த மசோதா குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் மின்சார சட்டத்திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.