மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு


புதுதில்லி: நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மாநில அரசுகள் திறமையாக செயல்படுகின்றன என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் வானொலியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அவர் இன்று பேசும்பொழுது, 130 கோடி நாட்டு மக்களின் தியாகங்களை மிகுந்த பணிவுடனும், ஆழ்ந்த மரியாதையுடனும் நான் தலைவணங்குகிறேன்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டம் மக்களால் முன்னெடுத்து நடத்தப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் யாரும் யாரும் பசியுடன் தூங்க இருக்கக் கூடாது என்பதை விவசாயிகள் உறுதி செய்து வருகின்றனர்.
இந்தியாவில், ஒவ்வொருவரும் அவரவர் சொந்த திறனுக்கேற்ப இந்த போரை நடத்துகிறார்கள். சிலர் தங்கள் வீட்டு வாடகையை தள்ளுபடி செய்கிறார்கள், பள்ளி வளாகத்துக்குள் தனிமைப்படுத்தலில் இருந்த சில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நன்றி தெரிவிக்கும் விதமாக பள்ளிக்கு வெள்ளையடிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தலாக உள்ள நாடுகளுக்கு தேவைப்படும் மருந்துகளை அனுப்புவது என்ற முடிவு இந்திய பண்பாட்டு நெறிமுறைகளின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், உதவி கரம் நீட்டியதற்காக இந்தியாவுக்கும் மற்றும் நாட்டு மக்களுக்கும் உலக தலைவர்கள் நன்றி தெரிவிக்கும்பொழுது நான் பெருமையாக உணர்ந்தேன்.
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மாநில அரசுகள் திறமையாக செயல்படுகின்றன. நாம் தொடர்ந்து கவனமாக இருப்பதுடன், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும்.
கொரோனா தொற்று நோயை எதிர்த்து போராட நமது நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் வெந்நீர், மூலிகை நீர் உள்ளிட்ட பரிந்துரைகளை நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இவற்றை அன்றாடம் பின்பற்றினால் நன்மை கிடைக்கும்
என்றார் மோடி.
பெருந்தொற்றுநோய் சட்டம் 1897-இன் கீழ் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர சட்டம் (ஆர்டினன்ஸ்) குறித்து பேசிய நரேந்திர மோடி , சுகாதார சேவைகளை ஆற்றி வருபவர்கள் தொடர்பாக அறிவித்திருக்கும் அவசரச்சட்டம் அவர்களுக்கு மிகவும் மனநிறைவை அளித்திருக்கிறது.
இந்த அவசரச்சட்டப்படி, கொரோனா வீரர்களுக்கு எதிராகப் புரியப்படும் வன்முறை, கொடுமை ஆகியவற்றுக்கு எதிராக, மிகவும் கடுமையான தண்டனை அளிக்கப்படக்கூடிய ஷரத்துக்கள் உள்ளன.
நமது மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், சமூக சுகாதாரப் பணியாளர்கள் போன்றவர்கள், இந்த நாட்டைக் கொரோனாவிடமிருந்து விடுவிக்கும் போராட்டத்தில் இரவு பகலாக போராடி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை மிகவும் அவசியமானது என்றார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.