மருத்துவ பணியாளர் பாதுகாப்புக்கான அவசர சட்டம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்
புதுதில்லி: இந்திய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு பெருந்தொற்று நோய்கள் அவசர சட்டம் (திருத்தம்) 2020-இன் கீழ் குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டவரிடம் இருந்து 50 ஆயிரம்ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் இந்த அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்குதலுக்கு
ஆளானதை அடுத்து மத்திய அரசு இந்த அவசர சட்டத்தை
கொண்டு வந்துள்ளது.
You must log in to post a comment.