மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிர்ப்பு – 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது


சென்னை: கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த சென்னை மருத்துவரின் சடலத்தை அடக்கம் செய்வதைத் தடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 14 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளானார். அதைத் தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது உயிரிழந்தார். அதையடுத்து சடலத்தை அடக்கம் செய்ய டி.பி.சத்திரம் பகுதிக்கு சென்றபோது அப்பகுதியில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வேலங்காடு இடுகாட்டுக்கு கொண்டு சென்றபோது அங்கு பலர் ஆம்புலன்ஸ் வாகனத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் சுகாதார ஊழியர்கள் காயமடைந்தனர்.
இது தொடர்பாக 74 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் பலரை கைது செய்தனர். இந்நிலையில் ஏற்கெனவே கைதான ஒரு பெண் உள்பட 14 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.