மருத்துவமனையில் முலாயம்சிங் யாதவ் அனுமதி


லக்னோ: உத்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், பிரதான எதிர்க்கட்சியின மூத்தத் தலைவருமான அவருக்கு வயது 81. வியாழக்கிழமை அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து லக்னொவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. வயது மூப்பு காரணமாக ஏற்படும் ஒருசில பாதிப்புகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நல்ல நிலையில் உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.