மருத்துவமனையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!
இலண்டன்: கொரோனா நோய்த் தொற்று காரணமாக தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது 203 நாடுகளில் பரவியுள்ளது. இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. சுமார் 48 ஆயிரம் பேர் வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சுமார் 6 ஆயிரம் பேர் உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.
இங்கிலாந்தில் இளவரசர் சார்ஸுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டது. தற்போது அவர் குமடைந்துள்ளார். இந்நிலையில் நோய்த் தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரதமர் போரிஸ் ஜான்சஸ் 10 நாள்கள் கடந்த நிலையில், தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
You must log in to post a comment.