மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநர்-ரஜினி நன்றி
சென்னை: மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு நிரந்தர இயக்குநராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஜினி எழுதிய கடிதத்துக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் எழுதிய கடித நகலுடன் கூடிய அப்பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில், நாட்டின் அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க உறுதி கொண்டிருக்கிறோம் எனவும், மத்திய அரசு தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தும் அக்கறையுடன் பணியாற்றி வருவதாகவும் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

You must log in to post a comment.