மத்திய அரசு மீது ப. சிதம்பரம் குற்றச்சாட்டு
சென்னை: மத்திய அரசு, இந்நேரத்தில் மக்களுக்கு பணம் வழங்குவதற்கு பதில் அவர்களிடம் இருந்து பணத்தை எடுக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10-ம், டீசல் லி்ட்டருக்கு ரூ.13-ம் மத்திய அரசு செவ்வாய்க்கிழமை உயர்த்தியது. இதையடுத்து காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: மத்திய அரசு தனது நிதி பற்றாக்குறையை ஈடுகட்ட கடன் பெற வேண்டும். கொரோனாவால் பொருளாதாரம் சரிந்துள்ள சூழலில் அதிக வரிகளை விதிக்கக் கூடாது. பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருக்கும்போதுதான் புதிய வரி விதிக்கலாம்.
வரியை உயர்த்தலாம். ஆனால் ஏற்கெனவே ஊரடங்கால் பெரும் துன்பத்தில் உள்ள ஏழைகளை, நடுத்தர மக்களை இன்னும் வேதனைப்படுத்தும்.
மத்திய அரசு மக்களுக்கு பணத்தை வழங்குவதற்கு பதிலாக அவர்களிடம் இருந்தே பணத்தை எடுக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
You must log in to post a comment.