மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையம்-மு.க.ஸ்டாலின் கண்டனம்


சென்னை:
மத்திய அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜல்சக்தி துறையின் நேரடி கட்டுப்பாட்டில், காவிரி மேலாண்மை ஆணையத்தை கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைத் தட்டிப் பறிக்கும் செயலாகும். இது காவிரி நீரை நம்பியிருக்கும் வேளாண்மையை அடியோடு வேரறுக்கும் மனிதாபிமானமற்ற செயல் .
இது தொடர்பாக வெளியிட்ட அரசிதழை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில், மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய பேரமைப்புகளை ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
உடனடியாக தமிழக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, இந்த முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வரையும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.