மதுப்பிரியர்களுக்கு அரசு அளித்த அதிர்ச்சி
நாளை முதல் மதுபானங்கள் விலை உயர்கிறது
சென்னை: தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது. தமிழக அரசு ஆயத்தீர்வை வரியை 15 சதவீதம் உயர்த்தியுள்ளதை அடுத்து இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒருபுறம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவி வருவதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. மற்றொருபுரம் நிதிநிலையை சமாளிக்க வேண்டிய இக்கட்டான நிலையிலும் அரசும் உள்ளது. இச்சூழலில் மதுபானக் கடைகளை திறப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளமபியுள்ளது.
இச்சூழலில் டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை திறக்கப்படவுள்ள நிலையில், மதுபானங்களுக்கு தமிழக அரசு ஆயத்தீர்வை வரியை 15 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்ரவு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. அரசுக்கு கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் மட்டும் டாஸ்மாக் வருவாய் ரூ.31,157 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களான சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமாட்டாது. நோய்த் தொற்று அதிகம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் மதுபான விற்பனை இருக்காது என அரசு அறிவித்துள்ளது.
You must log in to post a comment.