மதிமுக பொதுச் செயலர் வைகோ பிறந்த நாள்

சர்வதேச பல்லுயிர் பெருக்க தினம்
யேமன் – தேசிய நாள்
இலங்கை – தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள்

பிற நிகழ்வுகள்

கிமு 334 – மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தது.
1809 – வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் போனபார்ட்டின் படைகள் முதல்தடவையாக தோற்றன.
1834 – இலங்கை சட்டப் பேரவையின் முதல் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது.
1844 – பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
1867 – கர்நாடக இசைக் கலைஞர் உமையாள்புரம் சுவாமிநாத அய்யர் பிறந்த நாள்.
1906 – ரைட் சகோதரர்கள் தங்களின் பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1915 – ஐக்கிய அமெரிக்காவில் லாசன் முனை வெடித்தது.
1915 – ஸ்காட்லாந்தில் ஐந்து தொடருந்துகள் ஒன்றோடொன்று மோதியதில் 227 பேர் கொல்லப்பட்டனர்.
1942 – இரண்டாம் உலகப் போரில் மெக்சிக்கோ நேச நாடுகள் தரப்பில் போரில் குதித்தது.
1944 – மதிமுகவின் நிறுவனரும், அக்கட்சியின் பொதுச் செயலருமான வை.கோபால்சாமி பிறந்த நாள். அவர் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார்.

1958- இலங்கை ஏற்பட்ட இனக்கலவரங்களில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதுவே இதுவரையில் பதியப்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்.
1967 – பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் கடைத் தொகுதி ஒன்று தீப்பிடித்ததில் 323 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஸ்கோர்ப்பியன் மூழ்கியதில் 99 பேர் பலியாகினர்.
1972 – இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து குடியரசானது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்றது.
1990 – வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆனது.
1990 – விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது.
2004 – நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.