மகாராஷ்டிரத்தில் கரையைக் கடந்தது நிசார்கா புயல்


புதுதில்லி: மராட்டிய மாநிலம் அலிபாக் அருகே நிசார்கா புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலின் தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியது. இப்புயலுக்கு ‘நிசார்கா’ என்று பெயரிடப்பட்டது.
இப்புயல் புதன்கிழமை பிற்பகல் வடக்கு மகாராஷ்டிரம் அலிபாக் அருகே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புயல் கரையைக் கடக்கம்போது சுமார் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது. தற்போது வடகிழக்கு திசையில் நகரும் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலால் மின் கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய பேரிடர் குழுவினர் சாலையில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.