மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்ப விரும்பும் தமிழர்களை மீட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
சென்னை: மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்களை காலம் தாழ்த்தாமல் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
மகாராஷ்டிராவில் வாழும் தமிழகத் தொழிலாளர்கள் தமிழகத்துக்கு திரும்பி வர விரும்புகின்றனர். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் நானும், திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும் கலந்தாலோசித்தோம். தங்கள் அரசு தயாராக இருப்பதாக அப்போது உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசும் சிறப்பு ரயிலில் தொழிலாளர்களை அனுப்பத் தயாராக உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ராவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசு காலம் தாழ்த்தாது உடனடியாக அந்த தொழிலாளர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
You must log in to post a comment.