போர்க்கால அடிப்படையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை-முதல்வர் கே. பழனிசாமி

சென்னை : தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
சென்னையில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் உரையாற்றியது:


தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகளுக்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

கொரோனா தடுப்புப் பணி குறித்து இதுவரை 4 முறை மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் நோய்த் தொற்றைத் தடுக்க முடியும். சென்னையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 வேளையும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தமிழக அரசின் சரியான நடவடிக்கையால் நோய்த் தொற்றில் இருந்த குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோய்த் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மலம் கொரோனா நோய்த் தொற்றை தடுக்க முடியும்.
தமிழகத்தில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வாரத்துக்குள் படிப்படியாக அனுப்பப்படுவர். வெளிமாநிலங்களில் உள்ள தொழிலாளர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பொருள்களை வாங்கச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் ஜூன் மாதம் விலையில்லாமல் ரேஷன் பொருள்கள் வழங்கப்படும். தமிழகத்தில் யாரும் பட்டினியால் வாடவில்லை என்றார் முதல்வர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.