சரக்கு வாகனங்களை அனுமதிக்கலாம்: டிஜிபி உத்தரவு

சென்னை, ஏப்.3:தமிழகத்தில் அனைத்துவகை சரக்கு வாகனங்களையும் சாலைப் போக்குவரத்தில் அனுமதிக்குமாறு டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவை அடுத்து சரக்கு வாகனங்களை இயக்குவதில் இடர்பாடுகள் ஏற்பட்டு வந்தன. இதனால் அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய சரக்கு வாகனங்கள் போக்குவரத்து தடுக்கப்பட்டதால் மளிகைப் பொருள்கள் விலை உயர்வை சந்தித்தன.

இதையடுத்து தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்கள்களைக் கொண்டுச் செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களை தடுக்க வேண்டாம். அதேபோல் அவர்களிடம் அனுமதிச் சீட்டு கேட்டு வற்புறுத்த வேண்டாம் என டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இநத உத்தரவு அனைத்து மாவட்ட காவல் துறையினருக்கும் வியாழக்கிழமை பிறப்பட்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.