பொருளாதாரத்தை மேம்படுத்த குழு: தமிழக அரசு அமைப்பு

சென்னை:தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 7-ஆவது வாரமாக நீடித்து வரும் ஊரடங்கு அமல் காரணமாக பொருளாதார இழப்பு பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இக்குழுவுக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள்
ஆளுநர் ரங்கராஜன் தலைமை வகிக்கிறார்.
இக்குழு பொருளாதார பாதிப்பில் இருந்து எவ்வாறு மீள்வது என்பது குறித்து ஆய்வு செய்து 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கும். குழுவில், பொருளாதார வல்லுநர்கள், தொழில் துறையினர், யுனிசெப் உறுப்பினர்கள் என 24 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.