பெண் காவல் ஆய்வாளரின் மனிதநேயம்

மதுரை: பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கிய பெண் காவல் ஆய்வாளர்: தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுப்ரமணியபுரம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கலைவாணி. தினசரி அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியான முத்துப்பட்டி பார்வையற்றோர் இல்லம் சென்று அங்குள்ள பார்வையற்றவர்களுக்கு ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கினார்

இதனைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் இல்லங்களுக்கு சென்றும் மற்றும் அப்பகுதியில் வாழும் மிகவும் ஏழ்மையான கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஹார்லிக்ஸ் பாட்டில் வழங்கி உதவி செய்தார்.
மேலும் ,இவரது காவல் எல்லைக்குட்பட்ட இவர் தினசரி ஒவ்வொரு பகுதியாக தேர்ந்தெடுத்து மிகவும் எளிமையான குடும்பங்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் வழங்கி வருகிறார். அப்பகுதி மக்கள் அவரது மனித நேயத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.