புதுச்சேரி அரசால் ரயிலில் அனுப்பப்பட்ட 1168 வெளிமாநிலத் தொழிலாளர்கள்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கால் சிக்கித் தவித்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த 1,168 தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டனர்.
இதற்கான ரயில் கட்டணத்தை புதுச்சேரி அரசு ஏற்றது.
வெளிமாநில தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து விழுப்புரம், சென்னை வழியாக பிகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் வெளிமாநில தொழிலாளர்கள் 1,168 பேர் புறப்பட்டு சென்றனர்.
புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து அவர்களை வழியனுப்பி வைத்தார். முன்னதாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அரசு பேருந்து மூலம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
You must log in to post a comment.