புதுச்சேரியில் மதுக்கடைகள் திறப்பு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
தமிழகம், ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் மது விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், புதுச்சேரி அரசும் மது விற்பனையைத் தொடங்க திட்டமிட்டது. கொரோனா வரி விதிப்பாக மதுபானங்களை கூடுதல் வரியுடன் விற்பனை செய்வதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்ததை அடுத்து திங்கள்கிழமை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது.
அதைத் தொடர்ந்து திங்கள்கிழமை காலை கடைகள் திறக்கப்பட்டன. தமிழகம்-புதுச்சேரியில் கிடைக்கும் 165 மதுபானங்களுக்கு 100 சதவீத விலை உயர்வும், புதுச்சேரியில் மட்டும் கிடைக்கும் மது பானங்களுக்கு 25 சதவீதம் விலை உயர்வும், சாராயக் கடைகளில் 20 சதவீதம் விலை உயர்வும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கள்ளுக் கடைகளில் விலை உயர்வு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.