புதிய வோல்க்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவி


இந்தியாவிலுள்ள வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்து வரும் புதிய வோல்க்ஸ்வாகன் டைகூன் எஸ்யூவி காரில் உள்ள புதிய தொழில்நுட்ப கட்டமைப்புகள் குறித்த தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
இதனால் இந்த காரை வாங்கக் காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆவல் இரட்டிப்பாகியுள்ளது. விரைவில் வோல்க்ஸ்வாகன் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவரும் புதிய டைகுன் எஸ்யூவி காரின் கட்டமைப்பில் புதிய அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு கார் பிரியர்களுக்கு உள்ளது.

இந்திய வாகனச் சந்தையில் எஸ்யூவி கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அந்நிறுவனம் இறங்கியுள்ளது. வோல்க்ஸ்வாகன் நிறுவனங்களுக்கே உரிய வடிவமைப்பு அம்சங்கள், தொழில்நுட்ப கட்டமைப்புகள் குறித்த சிறப்பம்சங்களை புதிய வரவு கொண்டிருக்கும் என்ற அந்நிறுவனம் நுகர்வோருக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வோல்க்ஸ்வாகன் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஸ்டீஃபென் நாப் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த கார் 2021 மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படும். வோல்க்ஸ்வாகன் டைகுன் எஸ்யூவி கார் இரண்டு வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிகிறது.
நகர்ப்புற பயன்பாட்டுக்குரிய கார்களில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் என்பது சற்று சிக்கல் நிறைந்தது. அதனாலேயே இந்த காரை ஒரே ஆப்ஷனில் வெளியிட ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அல்லது மேனுவல் கியர்பாக்ஸ் கட்டமைப்பில் இடம்பெறும் இந்த எஞ்சின் 108 பிஎச்பி பவரை அதிகப்பட்சமாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்திய சாலைகளுக்கான ஏற்ற கட்டமைப்பை இந்த கார் பெறும் என்பதும் முக்கியமான அம்சம்.


எல்.இ.டி திறனில் ஒளிரும் புரொஜெக்டர் முகப்பு விளக்குகள், பகல்நேர விளக்குகள், பின்பக்க விளக்குகள் இந்த காரில் பொருத்தப்படவுள்ளன. மேலும் டெயில் லைட் கிளஸ்ட்டரை இணைக்கும் லைட் பார் அமைப்பு, டிஃப்யூசர் தோற்றத்துடன் கூடிய பாகம். குரோம் கிரில் அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த காரில் இடம்பெறவுள்ளன.
மிகவும் ப்ரீமியம் தரத்திலான கட்டமைப்புகள் மற்றும் வசதிகளுடன் இந்த காரினுடைய உட்புறம் தயாராகிறது. அதன்படி தொடுதிரை இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் சக்கரம், ஃபாஸ்டர் சார்ஜர் போன்ற எண்ணற்ற அம்சங்கள் காரில் அமையவுள்ளன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.