பிரான்ஸில் பொதுப் போக்குவரத்தில் கடுமையான நடைமுறை
பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டில் ஆவணங்கள் இன்றி பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்வோருக்கு புதன்கிழமை முதல் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் உலகை ஆட்டி வைத்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டில் பொதுப் போக்குவரத்து மேற்கொள்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலை 6.30 முதல் 9.30 மணி வரை, மாலை 4 மணி முதல் 7 மணி வரை பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்வோர் கட்டாயமாகத் தொழில் நிறுவனத்தின் அடையாள அட்டை (attestation employer) அல்லது தவிர்க்க முடியாத காரணங்கள், அழைப்பாணைகள் என்பதற்கான ஆவணம் (auto-attestation) கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் இன்றி பயணம் செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் தொடர்ந்து பயணிப்பதும் தடுத்து நிறுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
You must log in to post a comment.