பிரபல கன்னட நடிகர் மரணம்


பெங்களூரு: கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல சிரிப்பு நடிகர் புல்லட் பிரகாஷ் (44) காலமானார்.
கன்னட சினிமாவில் கோலோச்சி வந்த அவர் 300-க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒருசில தமிழ், தெலுங்கு படங்களிலும் அவர் நடித்துள்ளார். உடல் எடையை கடந்த 5 மாதங்களில் சுமார் 35 கிலோ வரை குறைத்து வந்த அவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வந்தது. அத்துடன் கல்லீரலும் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது.
பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் திங்கள்கிழமை காலமானார்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இதை கேள்விபட்ட அவரது ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.