பிரதமர் மோடி, ராகுல்காந்தி ரமலான் வாழ்த்து
புதுதில்லி: ரமலான் பண்டிகையையொட்டி பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர், ரமலான் வாழ்த்துகள். இந்த நன்னாள் இரக்கம், சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் உணர்வை மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்புடனும் வாழட்டும் தெரிவித்துள்ளார்.


அதேபோல் ராகுல்காந்தி தனது வாழ்த்து செய்தியில்,
அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.