பிரதமர் மோடியிடம் அமெரிக்கா வேண்டுகோள்
வாஷிங்டன்:கொரானா வைரஸ் நோய்த்தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடந்த மாதம் 25-ஆம் தேதி மருந்து பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்தது. இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தடைபட்டது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பிரதமரை தொடர்புகொண்டு ஏற்கெனவே ஆர்டர் கொடுத்திருந்த ஹோட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும் கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட ஒப்புக்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பைச் சந்தித்து வரும் நோயாளிகளின் உயிர் காக்கும் மாத்திரையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளது. இந்த மாத்திரைகள ஏற்கெனவே இந்தியாவிடம் அதிக அளவில் ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தன. மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்ட காரணத்தால் அமெரிக்காவுக்கு இந்த மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் .தடையை அமெரிக்காவுக்கு நீக்கி மாத்திரைகள் கிடைக்க உதவ வேண்டும் என இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளேன். அவரும் இதுபற்றி பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என டிரம்ப் தெரிவித்தார்.
You must log in to post a comment.