பிரதமருக்கு ப. சிதம்பரம் பாராட்டு

சென்னை, ஏப்.6: கொரானா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தியதை வரவேற்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி 2-ஆம் கட்டத்தில் உள்ளது. இது 3-ஆம் கட்டத்தை எட்டுவதற்கு முன் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் பல்வேறு அரசுக் கட்சித் தலைவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது;-
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்துள் நுழைகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியுள்ளது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை வரவேற்கிறோம். மிகப் பரவலாக, மிக அவசரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும் என்பதே அனைத்து வல்லுநர்களின் கருத்து. இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.