பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் மறைவு
அதிர்ச்சியில் திரையுலகம்
மும்பை: உடல நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் ரிஷிகபூர் காலமானார். அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திரையுலகின் மூத்த நடிகரான அவருக்கு வயது 68. மும்பையில் உள்ள எச்என் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.
இந்த நிலையில் ரிஷிகபூர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
அவரது மனைவியும் நடிகையுமான நீது கபூர் அவரது அருகில் இருந்தார். ரிஷி கபூர் மரணமடைந்த செய்தியை மூத்த நடிகரும், சக நடிகருமான அமிதாப்பச்சம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்தார்.
திரை நட்சத்திரங்கள் இரங்கல்
1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த ரிஷி கபூர் நடித்த மேரா நாம் ஜோக்கர், பாபி, ஹெல் ஹெல் மெயின், ஹபி ஹபி, கர்ஷ், அமர் அக்பர் அந்தோனி, ரபூ சக்கர், பனா, லவ் ஆஸ்கல் உள்பட பல வெற்றிப் படங்கள்
வசூல் சாதனை படைத்தன.
நடிகை நீத்து சிங்கை திருமணம் செய்து கொண்ட அவருக்கு மகன் ரன்பீர் கபூர் உள்ளார். அவர் தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகனாக உள்ளார்.
ராகுல் இரங்கல்: ராகுல்காந்தி வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில் இந்திய சினிமாவுக்கு இது ஒரு துயரமான வாரம். மற்றொரு பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர் காலமானார். ஒரு அற்புதமான நடிகர், தலைமுறைகளாக பெரும் ரசிகர்களை கொண்டவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்கள், ரசிகர்களுக்கு இரங்கல் எனக் கூறியுள்ளார்.
You must log in to post a comment.