பாலிவுட் நடிகர் இர்பான்கான் மறைவு

திரையுலகினர் இரங்கல்


மும்பை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் இர்பான்கான் (53) புதன்கிழமை இறந்தார்.
நடிகர் இர்பான்கான் கடந்த 2018-ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இலண்டனில் இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு குடல் தொற்று ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் புதன்கிழமை மரணமடைந்தார்.
இர்பான் கான் 1988 முதல் இந்திப் படங்களில் நடித்து வந்தார். 2017-இல் இவர் நடித்து வெளியான ‘இந்தி மீடியம்’ படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சீனாவிலும் பெரிய வெற்றி பெற்றது. 2011-இல் ‘பான் சிங் தோமர்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.

திரையுலகினர் இரங்கல்


சத்குரு ஜக்கி வாசுதேவ், நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் கமல்ஹாசன், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கெயிஃப், கிரிக்கெட் வீரர் ஹேமாங் பதானி நடிகை பிரியங்கா சோப்ரா, அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி, அஜய் தேவ்கன், ஷபனா ஆஸ்மி, ஆர்.மாதவன், சோனம் கபூர், ஷூஜித் சிர்கார், மினி மாத்தூர், நீலேஷ் மிஸ்ரா,பூமி பெட்னேகர், பரினிதி சோப்ரா, சஞ்சய் சூரி உள்ளிட்ட பிரபங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் பலரும் அவரது மறைக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

IrrfanKhan என்ற ஹாஷ்டாக் டுவிட்டரில் டிரெண்டாகி இந்தியளவில் முதலிடத்தில் உள்ளது.

பிரதமர் இரங்கல்

இர்பான்கான் மறைவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இர்ஃபான்கான் மறைவு திரைப்பட மற்றும் நாடக உலகிற்கு இழப்பு; தனது நடிப்பால் நினைவு கூறப்படுவார் என அவர் கூறியுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.