பாதி விலையில் திருப்பதி லட்டு!
திருப்பதி: திருப்பதி-திருமலை ஏழுமலையான் பக்தர்களுக்கு பாதி விலையில் லட்டு பிரசாதம் வழங்குவதற்கான நடவடிக்கையை திருப்பதி தேவஸ்தானம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்த தகவலில், பக்தர்கள் ஏழுமலையானின் தரிசனம் கிடைக்கும் பாக்கியம் கிடைக்காத நிலையில், அவரது பிரசாதமாவது கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனால், லட்டு பிரசாதத்தின் விலையை ரூ.50-இல் இருந்து ரூ.25 ஆக குறைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரை குறைந்த விலையில் லட்டு கிடைக்கும்.
ஆந்திர மாநிலம் முழுதும் உள்ள மாவட்ட மையங்கள், தேவஸ்தான கல்யாண மண்டபங்கள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் நகரங்களில் உள்ள தேவஸ்தான தகவல் மையங்கள் உள்ளிட்டவற்றில் லட்டு விற்பனை நடைபெறும். லட்டு விற்பனை தொடங்கும் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.