பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மருந்து-இந்தியா

புதுதில்லி: உலகில் கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில நாடுகள் இந்த மருந்தை கோரியுள்ளன. முக்கியமாக அமெரிக்க இந்த மருந்தை கோரியுள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மருந்துகளை அனுப்பி வைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியிடம் மருந்து தொடர்பாக பேசியுள்ளேன். ஏற்கெனவே ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளேன். ஒருவேளை இந்தியா அமெரிக்காவுக்கு மருந்துகளை அனுப்ப அனுமதி அளிக்காவிடில், அதற்கான பதிலடி கொடுக்கப்படலாம் என கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தற்போது கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதி செய்யப்படும். மருந்து விஷயத்தை யாரும அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.