பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?


புதுதில்லி: இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், மேலும் சில தினங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க பல மாநிலங்கள், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 14-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் ஏப்ரல் 14 முதல் குறைந்தபட்சம் 4 வாரங்களுக்கு வழக்கமான செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதரற்கு அனுமதிக்கக் கூடாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதில் மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்களும் அடங்கும்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 24-ஆம் தேதி இரவு 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இது வரும் 14-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நேரத்தில், தற்போது வரை நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4420-ஐ கடந்துள்ளது. 117 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சூழலில் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய ஒரு வாரகாலமே உள்ள சூழலில் மேலும் சில தினங்கள் ஊரடங்கை பின்பற்றவும், வைரஸ் தொற்று முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படலாம் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.