பராகுவே சிறுவர் நாள்

பராகுவே – சிறுவர் நாள்: குழந்தைகள் தினத்தைப் பொறுத்தவரை மிக வித்தியாசமாக, கொண்டாட்டமாக இல்லாமல் நினைவு அஞ்சலி செலுத்தும் நாளாக இங்கு கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 16-ம் தேதி, ‘அகோஸ்டா நு’ (Battle of Acosta Ñu) என்னும் போரின்போது 20,000 வீரர்களை எதிர்த்து 6 – 15 வயது சிறுவர்கள் 3,500 பேர் போரிட்டதை நினைவுகூரும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

பிற நிகழ்வுகள்

1513 – கினெகேட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர் பிரெஞ்சுப் படைகளை வென்றார்.
1780 – தென் கரோலினாவில் காம்டன் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் அமெரிக்கப் படைகளை வென்றன.
1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த கிளர்ச்சியாளர்கள் அடக்கப்பட்டதில் 11 பேர் கொல்லப்பட்டு 400 பேர் காயமடைந்தனர்.
1865 – 4 ஆண்டுகள் ஸ்பானியரின் பிடியில் இருந்த டொமினிக்கன் குடியரசு மீண்டும் விடுதலை பெற்றது.
1868 – பெருவில் அரிக்கா (இன்றைய சிலியில்) இடம்பெற்ற 8.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 25,000 பேர் கொல்லப்பட்டனர்.
1945 – ஜப்பானியப் பிரதமர் கண்டாரோ சுசுக்கி மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
1945 – சீனாவின் கடைசி மன்னன் பூயி சோவியத் படைகளினால் கைப்பற்றப்பட்டான்.
1964 – தென் வியட்நாமில் அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் அதிபர் டோங் வான் மின் பதவி அகற்றப்பட்டார்.
1987 – அமெரிக்காவின் மிச்சிகனில் MD-82 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 155 பேர் கொல்லப்பட்டனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது.
2005 – வெனிசுவேலாவில் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 160 பேர் உயிரிழந்தனர்.
2006 – இந்தியாவில் இம்பால் இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.