பரவையில் கொரோனா பரிசோதனை முகாம்
மதுரை, ஜூலை 10: மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி மற்றும் மருத்துவத் துறை இணைந்து நடத்தும் கொரானா வைரஸ் நோய் தொற்று
பரிசோதனை சிறப்பு முகாம் பரவை, ஊர்மெச்சிகுளம், சத்தியமூர்த்தி நகர் அமைந்துள்ள வார்டு எண் 1 முதல் 15 வரை பகுதியில் நடைபெற்றது.
இம்முகாமில் 200 பேருக்கு மேல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவ முகாமில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் சு சேதுராமன் முகாமை தொடங்கி வைத்தார். உடன், பரவை பேரூராட்சி செயல் அலுவலர்
கி.சுந்தரி, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், பரவை பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.
You must log in to post a comment.