பத்திரிகையாளர்கள் சந்திப்பை பாதியில் முடித்துக்கொண்ட டிரம்ப்

வாஷிங்டன்:பத்திரியாளர் சந்திப்பின்போது பெண் நிருபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டொனால்டு டிரம்ப், அச்சந்திப்பை பாதியிலேயே நிறைவு செய்து புறப்பட்டுச் சென்றார்.


கொரோனா பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாள்தோறும் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்தித்து வருகிறார். அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது வழக்கம்.


இந்நிலையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, யார் பரிசோதனை செய்து கொள்ள விரும்பினாலும் பரிசோதனை செய்து கொள்ளலாம். கொரோனா தொற்றால் உயிரிழப்பு கணிசமான அளவு குறைந்துள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.


அப்போது சிபிஎஸ் நியூஸ் சேனல் நிருபர் வெய்ஜியா ஜியாங் என்பவர் அமெரிக்கர்கள் தொடர்ந்து உயிரிழந்து கொண்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து அவருக்கும், டிரம்புக்கும் அக்கேள்வி தொடர்பான வாககுவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், சி.என்.என். நிருபர் காலின்ஸ் கையை உயர்த்தி தான் கேள்வி கேட்கலாமா எனக் கூறியபடி கேள்வி எழுப்பினார்.


ஆனால் டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொள்வதாகக் கூறி விடை பெற்றுச் சென்றார். அதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.