பத்திரிகையாளர்களுக்கு ரூ.10 லட்சம் சுகாதார காப்பீடு: மம்தா தகவல்

கொல்கத்தா: பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட கொரோனா பணியாளர்கள் பலருக்கும் மேற்குவங்க அரசு ரூ.10 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை சார்பில் 1993 முதல் மே 3-ஆம் தேதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவில், ஜனநாயகத்தில் பத்திரிகையின் பங்கு பாராட்டுக்குரியது. அதன் கடமைகளை அச்சமின்றி செயலாற்ற வேண்டும். பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட கொரோனா பணியாளர்கள் பலருக்கும் மேற்குவங்க அரசு ரூ..10 லட்சம் வரை சுகாதார காப்பீட்டை அறிவித்துள்ளது. பத்திரிகை ஒரு ஜனநாயகத்தின் நான்காவது தூண். ஊடகவியலாளர்கள் சமூகத்திற்கு அவர்கள் செய்த பங்களிப்புக்காக நாங்கள் அவர்களை மதிக்கிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.