பஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு

அமிர்தசரஸ்: கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை தீவிரப்படுத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரானா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரித்து வருகிறது. இதில் அதிகமாக அமெரிக்கா பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் வைரஸ் தாக்கம் 2-ஆம் கட்ட நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. இந்நிலையில் 3-ஆம் கட்டத்தை எட்டுவதை தடுக்கும் வகையில் பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவு காலத்தை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரி வருகின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு காலத்தை மேலும் நீட்டிக்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மே 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ஒடிஶா மாநில அரசும் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டித்துள்ளது.
தமிழக அரசும் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காரணம் சுகாதாரத் துறையினர், மருத்துவக் குழுவினர் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மேலும் சில வாரங்களுக்கு ஊரடங்கு தேவை என அரசிடம் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இச்சூழலில் தமிழக அரசும் இதற்கான முடிவை விரைவில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.