நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய் ரசம்

தேவையான பொருள்கள்.:
பெரிய நெல்லிக்காய் – 3,
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப,
துவரம்பருப்பு வேகவைத்த நீர் – ஒரு கப்.

பொடி செய்ய.:
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சிறிதளவு, தனியா – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
நெய் – சிறிதளவு.

தாளிக்க.:
எண்ணெய், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை.: பொடி செய்யக் கொடுத்தவற்றை, சிறிதளவு நெய்யில் வறுத்துப் பொடிக்கவும். நெல்லிக்காயை கொட்டை நீக்கி சீவிக்கொள்ளவும். அதனுடன் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நைஸாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பருப்பு வேகவைத்த நீர் விட்டு வறுத்து அரைத்த பொடி, நெல்லி – இஞ்சி விழுது சேர்த்து, உப்பு போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கவும். தேவையெனில் ஒரு டேபில்ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். இந்த ரசம் வைட்டமின் சி நிறைந்தது என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை உடலுக்குத் தருகிறது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.