நெல்சன் மண்டேலா பிறந்த நாள்

நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர். உலகில் அதிக மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவர். முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பின்னர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். மண்டேலாவின் 27 ஆண்டு கால சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக உள்ளது.

1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. இனவெறி ஆட்சியில் ஊறிக் கிடந்த தென்னாப்பிரிக்காவை மக்களாட்சிக்கு இட்டுச் சென்ற அவர், ஆயுதப் போராட்டத் தலைவராக இருந்தபோது தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு 27 ஆண்டுகள் சிறையில் வாடினார். பின்னர் விடுதலையான அவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார். குடியரசுத் தலைவராக தொடர்ந்த அவர் 2008 ஜூன் மாதம் பொது வாழ்வில் இருந்து விலகினார்.

சிறப்பு நாள்

உருகுவே – அரசியலமைப்பு நாள் (1830)

பிற நிகழ்வுகள்

64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.
1656 – போலந்து, மற்றும் லித்துவேனியப் படைகள் வார்சாவில் சுவீடனின் படைகளுடன் போரைத் தொடங்கின. சுவீடிஷ் படைகள் இப்போரில் வெற்றி பெற்றனர்.
1872 – ஐக்கிய ராச்சியத்திலும் அயர்லாந்திலும் ரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் கொல்லப்பட்டனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

1918 – தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த நாள் (இறப்பு 2013)

1935 – இந்து ஆன்மிகத் தலைவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த நாள்.

1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து ஜப்பானியப் பிரதமர் ஹிடெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.
1965 – சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1966 – நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.
1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.
1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 மாயன் பழங்குடியினர் ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – கலிபோர்னியாவில் மக்டொனால்ட் உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே மலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎மொன்செராட்டின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.
1997 – மும்பாயில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.
1998 – பப்புவா நியூ கினியில் 23-அடி கடற் சூறாவளியில் 3,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2007 – மும்பாயில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – கவிஞர் வாலி மறைந்த நாள்.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.