நெய்வேலியில் பாய்லர் வெடித்து விபத்து – 7 பேர் காயம்|

கடலூர்: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள 2-ஆவது அனல் மின்நிலையத்தில் வியாழக்கிழமை மாலை பாய்லர் வெடித்தது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
அனல்மின்நிலையத்தில் நடந்த இந்த விபத்தை அடுத்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டு தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
தற்காலிகமாக அனல்மின்நிலைய மின்உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை அடுத்து அப்பகுதி முழுமையாக புகைமண்டலமாக காட்சி தந்தது.

Spread the love

You may also like...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.