நிசார்கா புயல் இன்று கரை கடக்கிறது
புதுதில்லி: இந்த ஆண்டில் எதிர்கொள்ளவிருக்கும் இரண்டாவது புயலான நிசார்கா புதன்கிழமை பிற்பகலில் ஹர்ஹரேஸ்வர்-டாமன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரபிக் கடலில் இருந்து மகாராஷ்டிரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிசார்கா கரையில் இருந்து சுமார் 700 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் காரணமாக மணிக்கு 105 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஜூன் மாதத்தில் புயல் உருவானால் அதை வெப்பமண்டல புயல் என்றே அழைப்பதுண்டு. இப்புயலால் கல்யாண், வசாய், நவி மும்பை, பத்லாப்பூர், அம்பர்நாத் போன்ற இடங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நிசார்கா புயல் குறித்த நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
You must log in to post a comment.