நாளை கருணாநிதி பிறந்த நாள்: ஆடம்பர நிகழ்வுகள் வேண்டாம்-மு.க.ஸ்டாலின்
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 9-ஆவது பிறந்த நாள் புதன்கிழமை வருகிறது. இந்நிலையில், அவரது பிறந்த நாளில் ஆடம்பர நிகழ்வுகள் வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞரின் 97-ஆவது பிறந்தநாளான நாளை (ஜூன் 3) அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே கலைஞரின் திருவுருவப் படத்துக்கும், திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன்.
கொரோனா பரவலால், குறிப்பாக சென்னையில் கலைஞர் பிறந்த நாளுக்கான எவ்வித ஆடம்பர நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என்று தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
You must log in to post a comment.